நபார்டு மாவட்ட மேம்பாட்டு அலுவலகம் தொடக்க விழா

விழுப்புரம்: விழுப்புரத்தில் நபார்டு மாவட்ட மேம்பாட்டு அலுவலகம் தொடக்க விழா நடைபெற்றது.

விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியான நபார்டு நேற்று ஒரு முக்கிய இடத்தை எட்டியுள்ளது.

இதன் மாவட்ட மேம்பாட்டு அலுவலகம் திறப்பு விழா விழுப்புரத்தில் நடைபெற்றது.

இந்த புதிய அலுவலகம், மாவட்டத்தில் நபார்டின் வளர்ச்சி முயற்சிகளை வலுப்படுத்தவும், ஊரக நிறுவனங்களுடனான இதன் தொடர்பை மேலும் ஆழப்படுத்தும் நோக்கத்தை கொண்டது.

இதன் துவக்க விழாவில், நபார்டு தமிழ்நாடு பிராந்திய அலுவலகம் பொது முகமையாளர் வசீகரன் பங்கேற்று தொடங்கி வைத்து, மாவட்ட அலுவலகங்கள், ஊரகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் மிக முக்கிய பங்குவகிப்பது பற்றி கூறினார்.

தொடர்ந்து அவர், நபார்டு ஊடாக நிதி சேர்ப்பு, காலநிலை பொறுப்பான வேளாண்மை, ஊரக அடிக்கோளமைப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு ஆகிய துறைகளில் முன்னேற்றம் அடைவது நபார்டின் முக்கிய குறிக்கோளாகும் என விளக்கினார்.

உதவி பொது முகமையாளர் ரவிசங்கர் தலைமை தாங்கி, மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், எதிர்கால திட்டங்களை பற்றி கூறினார்.

விழாவில், பங்குதாரர்கள், தொண்டு நிறுவனங்கள், விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக்குழு கூட்டமைப்புகள், கூட்டுறவு வங்கிகள், அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement