சிமென்ட் சாலை பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

வில்லியனுார்: கொம்பாக்கம்பேட், புதுநகரில் ரூ. 17 லட்சம் செலவில் சிமென்ட் சாலைப் பணியை சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், கொம்பாக்கம்பேட் புதுநகரில் ரூ. 17 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது.

எதிர்க்கட்சித் தலைவர் சிவா பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், செயற்பொறியாளர் பக்தாச்சலம், இளநிலை பொறியாளர் திருவருட்செல்வம், முக்கியஸ்தர்கள் செல்வநாயகம், சேகர், கதிரவன், அருள்மணி, நாகராஜ், கிருஷ்ணராஜ், சங்கர், கதிர்வேல், முருகன், அலிஸ்டர், எலியாஸ், கிஷோர், எக்மண்ட், ரெமோ, ஏழுமலை, மகேந்திரன், மனோகர், ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement