லஷ்மி கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா

கள்ளக்குறிச்சி: பங்காரம் லஷ்மி கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கணினி துறை தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். கல்லுாரி முதல்வர்கள் பழனியம்மாள், பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் ஆத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் பிரேம்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்; பெற்றோர்களின் தியாகங்களை நினைவில் கொண்டு மாணவர்கள் கல்வி பயில வேண்டும். கல்லுாரிக்கு செல்லும் மாணவர்களை பெற்றோர்களும் கண்காணிக்க வேண்டும்.

சமூக ஊடகங்களுக்கு அடிமையாகாமல் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி பேசினார். இதில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

துணை முதல்வர் சசிகலா நன்றி கூறினார்.

Advertisement