உடனடியாக பதவி விலகி சென்று விடுங்கள் அமெரிக்க வங்கி தலைவரிடம் டிரம்ப் காட்டம்

வாஷிங்டன்: அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக விலகுமாறு, ஜெரோம் பவலை அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க வீட்டு வசதி நிதி கண்காணிப்பு ஏஜென்சியின் இயக்குனரான பில் புல்டி, சமூக வலைத்தளத்தில், பவலை விமர்சித்து பதிவிட்டார். வாஷிங்டனில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்தை புதுப்பித்ததில் முறைகேடு நடந்ததாகவும், அதுகுறித்து பவலிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டார்.
அரசியலில் ஒருசார்பாக பவல் நடந்து கொண்டது குறித்தும் விசாரிக்க வேண்டுமென அவர் கூறினார். அதற்கு கருத்து தெரிவிக்கும் வகையில், தன் சமூகவலைதளத்தில் அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
அதில், 'மிகத் தாமதமானது' எனக் கூறிய அவர், 'கடன் வட்டிக் குறைப்பிலும் வேகம் காட்டாத ஜெரோம் பவல், உடனடியாக பதவி விலக வேண்டும்' என, தெரிவித்துள்ளார். பவல் பதவி விலகியதும், பெடரல் ரிசர்வ் வங்கி தலைவர் பதவிக்கு சில நபர்களை மனதில் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
தற்போது 4.25 சதவீதத்தில் இருந்து 4.50 சதவீதமாக உள்ள கடன் வட்டியை குறைக்குமாறு, பெடரல் ரிசர்வுக்கு, சில நாட்கள் முன்தான் அதிபர் டிரம்ப் கடிதம் அனுப்பினார். இந்நிலையில், பவலை ராஜினாமா செய்ய அவர் வலியுறுத்தியுள்ளார்.
விரைவாக கடன் வட்டியை குறைக்க மறுப்பதாக, பவல் மீது, கடந்த ஜனவரியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். பவலின் செயல்பாடுகளால் பொருளாதார வளர்ச்சி பாதிப்பதாகவும், பணவீக்கம் உயரும் என்ற பவலின் கணிப்பு தவறானது என்றும் கூறி வருகிறார் டிரம்ப்.
@block_B@
அமெரிக்க சட்டத்தின் படி, பெடரல் ரிசர்வ் வங்கி தலைவரை, தீவிர காரணமின்றி அதிபரால் பதவி நீக்கம் செய்ய முடியாது. தவறான நடத்தை என புரிந்துகொள்ளப்படும் நம்பத்தகுந்த புகார் மட்டுமே, பதவி நீக்க அதிகாரத்தை அதிபருக்கு அளிக்கிறது. கொள்கை முடிவு, அரசியல் காரணங்களால் பதவியிலிருந்து நீக்க இயலாது என்ற நிலையில், டிரம்ப் அதிபரான பிறகு, பதவி விலக முடியாது என ஜெரோம் பவல் தெரிவித்தார். அவரது பதவிக் காலம் மே 2026 வரை உள்ளது. block_B
மேலும்
-
லலித்மோடி, விஜய் மல்லையா ஆட்டம் பாட்டம் கும்மாளம் ; குற்ற வழக்கில் தேடப்படுபவர்கள்
-
'புதிய வேளாண் காடுகள் விதிகள்' - நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
-
இந்தியாவுக்கு எல்லை ஒன்று; எதிரிகள் 3 பேர்: ராணுவ துணை தளபதி
-
கர்நாடகாவில் ஓடும் ரயிலில் பயங்கர தீவிபத்து; லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு
-
முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு
-
நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி: போட்டோ வைரல்