நான்கு வழிச்சாலை மைய தடுப்பில் பூச்செடிகள் வைக்கும் பணி மும்முரம்

திருவாலங்காடு:திருவள்ளூர் நான்கு வழிச்சாலை மைய தடுப்பில் பூச்செடிகள் வைக்கும் பணி நெடுஞ்சாலைத் துறையால் மும்முரமாக நடந்து வருகிறது.

திருவள்ளூர் ---- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை 30 கி.மீ., உள்ளது. இச்சாலையில் திருவாலங்காடு சர்க்கரை ஆலை சந்திப்பில் இருந்து அரக்கோணம் வரையில் நான்கு வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது. அதன்படி 68 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழியாக மாற்றப்பட்டு கடந்த ஏப்., மாதம் பணி முடிந்தது. இச்சாலை வழியாக தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றன.

இந்நிலையில் நெடுந்துார பயணத்தின் போது எதிரில் வரும் வாகனங்களால் கண்கள் கூசக்கூடாது என்பதற்காகவும், பசுமையான சூழலுக்காகவும் நான்கு வழிச்சாலை மைய தடுப்பில் பூச்செடி, மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதனடிப்படையில் பல இடங்களில் செவ்வரளி, பொன் அரளி உள்ளிட்ட பூச்செடிகளை நடும் பணியில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிப்பு பணியும் நடக்கிறது.

Advertisement