முதல்வரின் ஊட்டச்சத்து திட்டம் பயறு தொகுப்பு இலவசம்

கம்பம்: முதல்வரின் ஊட்டச் சத்து திட்டத்தின் கீழ் வீடுகளில் பயறு வகை செடிகளை வளர்ப்பதற்காக அவரை, துவரை, மொச்சை பயறு வகைகள் 25 கிராம் தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது.

வீடுகளில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு நாற்றுகள், விதைகள், பழச்செடி தொகுப்புகள் தோட்டக்கலைத் துறை மூலம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் வீடுகளில் மாடி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வேளாண் துறை மூலம் முதல்வரின் ஊட்டச்சத்து திட்டம் என்ற பெயரில் பயறு வகைதொகுப்பு வழங்கப்படுகிறது.

அவரை 10 கிராம், மொச்சை 10 கிராம், துவரை 5 கிராம் என 25 கிராம் விதைகள் கொண்ட தொகுப்பு இலவசமாக வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 25 பயனாளிகளுக்கு இந்த பயறு விதை தொகுப்பு வழங்கப்படுகிறது.

இந்த விதைகளை பயன்படுத்தி வீடுகளில் பயறு வகைகளை உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படுகிறது.

Advertisement