கே.பி.எல்., போட்டிகள் ரசிகர்களுக்கு தடையா?
தமிழகத்தில் கிராம பகுதிகளில் வசிக்கும் கிரிக்கெட் வீரர்கள் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் டி.என்.பி.எல்., 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுபோல கர்நாடகாவில் கிராம பகுதிகளில் வசிக்கும், திறமையான கிரிக்கெட் வீரர்களை வெளி உலகிற்கு அடையாளம் காணும் வகையில் கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் கே.பி.எல்., எனும் கர்நாடக பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள், கடந்த 2022 ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.
குல்பர்கா மைஸ்டிஸ், ஹூப்பள்ளி டைகர்ஸ், கல்யாணி பெங்களூரு பிளாஸ்டர்ஸ், மங்களூரு டிராகன்ஸ், மைசூரு வாரியர்ஸ், ஷிவமொக்கா லயன்ஸ் என்று ஆறு அணிகள் விளையாடுகின்றன.
வீரர்கள் ஏலம்
இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் தொடர், அடுத்த மாதம் துவங்க உள்ளது. வரும் 15ம் தேதி அணிகளுக்கு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக பெங்களூரு, மைசூரு, ஹூப்பள்ளியில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு அனைத்து போட்டிகளும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மட்டுமே நடத்த வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கே.பி.எல்., 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடத்துவது தொடர்பாக, கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் உறுப்பினர்கள் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அசோசியேஷன் தலைவர் ரகுராம் பட் தலைமை வகித்தார். அணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் அனுமதி
ஆலோசனை கூட்டத்தில் நடந்த விவாதத்தில், ஆர்.சி.பி., அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது, சின்னசாமி மைதானம் முன்பு கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான சோக சுவடு இன்னும் மறையவில்லை. இந்த நேரத்தில் கே.பி.எல்., போட்டிகளை நடத்த வேண்டுமா என்று யோசித்தாலும், கிராம பகுதிகளில் வசிக்கும் திறமையான கிரிக்கெட் வீரர்களை, வெளி உலகிற்கு கொண்டு வருவது அவசியமாக உள்ளது.
மைசூரு, ஹூப்பள்ளியில் அடுத்த மாதம் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால் அனைத்து போட்டிகளையும், சின்னசாமி மைதானத்தில் நடத்தலாம். ஆனால் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம். ஒருவேளை ரசிகர்களை அனுமதிக்க நினைத்தால், குறைந்த அளவில் ரசிகர்களுக்கு, டிக்கெட் வினியோகம் செய்தால் போதும். இதற்கும் போலீஸ் துறையிடம் அனுமதி கேட்போம். அனுமதி கிடைக்காவிட்டால், ரசிகர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று, ஒருமனதாக முடிவு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
- நமது நிருபர் -.
மேலும்
-
'யங் இந்தியன் நிறுவனம் காங்கிரசின் மற்றொரு முகம்' நீதிமன்றத்தில் ஈ.டி., தகவல்
-
1531 சதுர கி.மீ., பரப்புடன் கோவை மாஸ்டர் பிளான் - 2041: வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
-
பா.ம.க.,எம்.எல்.ஏ., அருளுக்கு அடுத்தடுத்து ஷாக்; சட்டசபையில் அன்புமணி வைத்த செக்!
-
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்
-
ஆப்கன் தலிபான் அரசை அங்கீகரித்த முதல் நாடு ரஷ்யா!
-
வங்கதேசம் செல்லுமா இந்திய கிரிக்கெட் அணி ? விரிசல் வலுக்கிறதா ?