1531 சதுர கி.மீ., பரப்புடன் கோவை மாஸ்டர் பிளான் - 2041: வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்

13


கோவை: கோவை உள்ளூர் திட்டப்பகுதியின் இரண்டாவது மாஸ்டர் பிளானை, தலைமை செயலகத்தில் இன்று (ஜூலை 04) நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.


கோவை உள்ளூர் திட்டப்பகுதி, 1994ம் ஆண்டு வழங்கப்பட்ட ஒப்புதல்படி 1287 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டதாக இருந்தது. இதை மேம்படுத்தி, இரண்டாவது முழுமைத்திட்ட வரைவு தயார் செய்யப்பட்டது. இது தொடர்பாக, பொதுமக்கள், பல்வேறு அமைப்பினரிடம் இருந்து கருத்துக்கள், பரிந்துரைகள் பெறப்பட்டன.

அதன் அடிப்படையில், கோவை மாநகராட்சி, மதுக்கரை, கருமத்தம்பட்டி, கூடலுார், காரமடை நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாக இரண்டாவது மாஸ்டர் பிளான் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியின் மொத்த பரப்பளவு 1531.57 சதுர கிலோமீட்டர் ஆகும்.



துல்லியமான நகர திட்டமிடலை கொண்டு வடிவமைக்கப்பட்டு, 40க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு, ஆலோசனையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மண்டல இணைப்புகளை மேம்படுத்துவது, சமூக, பொருளாதார உத்திகளை வலுப்படுத்துவது, வீட்டு வசதிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்தல், சுற்றுச்சூழல், இயற்கை வளங்களை பாதுகாத்தல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, இந்த மாஸ்டர் பிளான் 2041 உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Advertisement