கர்நாடகாவில் விஷம் வைத்து கொல்லப்பட்ட 20 குரங்குகள்; வனத்துறை தீவிர விசாரணை

கூடலுார்; கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் விஷம் வைத்து, 20 குரங்குகள் கொல்லப்பட்ட சம்பவம், வனத்துறையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கடந்த வாரம் விஷம் வைத்து, 5 புலிகள் கொல்லப்பட்டன. மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், நேற்று விஷம் வைத்து, 20 குரங்குகள் கொல்லப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட குரங்குகள் உடல்களை, பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஒட்டிய கேம்பனஹல்லி பகுதியில் வீசி சென்றுள்ளனர்.
கர்நாடக வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்து, உயிருக்கு போராடி கொண்டிருந்த சில குரங்குகளை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'குரங்குகள் வேறு பகுதியில் விஷம் வைத்து கொல்லப்பட்டு, அதன் உடலை துாக்கி வந்து இப்பகுதியில் வீசி சென்றிருக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சாம்ராஜ்நகர் பகுதிகளில் விசாரணை மேற்கொண்டுள்ளோம்,'என்றனர்.





மேலும்
-
கர்நாடகாவில் ஓடும் ரயிலில் பயங்கர தீவிபத்து; லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு
-
முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு
-
நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி: போட்டோ வைரல்
-
பயணிகள் சேவையில் டாப் ; முதல் இடத்தில் 3 விமான நிலையங்கள்
-
பொன்முடியின் ஆபாச பேச்சு; விசாரணைக்கு போலீசார் தயங்கினால் சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்; ஐகோர்ட் எச்சரிக்கை
-
'யங் இந்தியன் நிறுவனம் காங்கிரசின் மற்றொரு முகம்' நீதிமன்றத்தில் ஈ.டி., தகவல்