மீடியனில் மோதிய பைக்; இரு நண்பர்கள் உயிரிழப்பு

ஜோலார்பேட்டை; ஜோலார்பேட்டையில், மையத்தடுப்பில் பைக் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

திருப்பத்துாரை சேர்ந்தவர் கவுரிசங்கர். ஜோலார்பேட்டை அடுத்த தாயப்பன் வட்டத்தை சேர்ந்தவர் பிரபு, 35. இருவரும் நண்பர்கள். ஜூன், 27 இரவு, 9:00 மணியளவில், ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்துார் நோக்கி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பல்சர் பைக்கில் சென்றனர்.

ஜோலார்பேட்டையில், சாலையிலிருந்த மையத்தடுப்பில் பைக் மோதியதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று அதிகாலை இருவரும் உயிரிழந்தனர். ஜோலார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement