மாற்றுத்திறனாளியை தாக்கிய போலீஸ் ஏட்டு 'சஸ்பெண்ட்'
முதுகுளத்துார்; மாற்றுத்திறனாளியை தாக்கிய வழக்கில் தனிப்பிரிவு போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் அருகே சித்திரங்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி தங்கவேலு, 40. அப்பகுதி கண்மாய் கரையில் பெட்டிக்கடை வைத்துள்ளார். ஜூன் 14ல் பேரையூர் தனிப்பிரிவு முதல்நிலை காவலர் லிங்குசாமி, 36, அக்கடையில் சில்லரை விலையில் மது விற்பனை புகார் குறித்து சோதனை செய்ய வந்தார்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் ஒருவரை ஒருவர் கம்பியால் தாக்கிக்கொண்டனர். இதில், லிங்குசாமிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தங்கவேலுக்கு கைமுறிவு ஏற்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இப்பிரச்னை தொடர்பாக தங்கவேலு, லிங்குசாமி இருவரது புகாரில், பேரையூர் போலீசார் வழக்கு பதிந்தனர். ஜூன் 25ல் லிங்குசாமியை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., சந்தீஷ் உத்தரவிட்டார்.
மேலும்
-
ஹிமாச்சலில் கனமழைக்கு 63 பேர் பலி: மத்திய அரசு உதவ தயார் என அமித் ஷா அறிவிப்பு
-
லலித்மோடி, விஜய் மல்லையா ஆட்டம் பாட்டம் கும்மாளம் ; குற்ற வழக்கில் தேடப்படுபவர்கள்
-
'புதிய வேளாண் காடுகள் விதிகள்' - நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு
-
இந்தியாவுக்கு எல்லை ஒன்று; எதிரிகள் 3 பேர்: ராணுவ துணை தளபதி
-
கர்நாடகாவில் ஓடும் ரயிலில் பயங்கர தீவிபத்து; லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு
-
முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு