லலித்மோடி, விஜய் மல்லையா ஆட்டம் பாட்டம் கும்மாளம் ; குற்ற வழக்கில் தேடப்படுபவர்கள்

4

லண்டன்: பல்வேறு நிதி முறைகேட்டு வழக்கில் தேடப்படும் பிரபல தொழில் அதிபர்கள் லண்டனில் ஒரு விழாவில் பங்கேற்று பார்ட்டி கொண்டாடிய படங்கள் , வீடியோ வைரலாகி பரவி வருகிறது.


@1brகடன் மற்றும் பண பரிமாற்றத்தில் மத்திய நிதி மற்றும் அமலாக்க துறையினர் மூலம் தேடப்படும் நபர்களான லலித்மோடி, விஜய் மல்லையா இருவரும் லண்டனில் ஒரு விருந்தில் பங்கேற்றனர். இதில் 315 பேர் கலந்து கொண்டனர். பிரபல தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் லலித்மோடி , விஜய் மல்லையா ஜாலியாக பாட்டு பாடி, ஆட்டம் ஆடி , அரட்டை அடித்து கொண்டிருந்தனர். இந்த படங்களை பலர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்னர். இது வைரலாகி பரவி வருகிறது.


@twitter@https://twitter.com/LalitKModi/status/1940769922071617816twitter

Advertisement