ஹிமாச்சலில் கனமழைக்கு 63 பேர் பலி: மத்திய அரசு உதவ தயார் என அமித் ஷா அறிவிப்பு

புதுடில்லி: ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் பருவமழைக்கு 63 பேர் பலியான நிலையில், மத்திய அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
@1brபருவமழை என்ற போதிலும், முன் எப்போதும் இல்லாத அளவாக ஹிமாச்சல் பிரதேசத்தில் பலத்த மழை கொட்டி வருகிறது. பல தருணங்களிலும் மேகவெடிப்பும் சேர்ந்து கொள்ள நிலச்சரிவால் கடும் சேதம் உண்டானது.
அதிகளவாக மண்டி மாவட்டத்தில் 37 பேர் பலியாகி உள்ளனர். கிட்டத்தட்ட ரூ.400 கோடி அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.
இந் நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹிமாச்சல் பிரதேச மாநிலத்திற்கு உரிய உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார். இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது;
நாட்டின் பல மாநிலங்களில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்களுடன் பேசினேன். மக்களுக்கு உதவ போதிய எண்ணிக்கையிலான தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் மாநிலங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன.
தேவை ஏற்படின், கூடுதல் படைகளை அனுப்ப மத்திய அரசு தயாராக உள்ளது. மத்திய அரசிடம் இருந்து அளிக்கப்படும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிப்பதாக உறுதி அளித்தேன்.
இவ்வாறு அமித் ஷா கூறி உள்ளார்.
அதேநேரத்தில், ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் ஜூலை 7ம் தேதி வரை கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement