ப ழ விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பரிதாப பலி

திருநெல்வேலி; மேலப்பாளையத்தில், ரம்புட்டான் பழம் சாப்பிட்ட சிறுவன், தொண்டையில் அதன் விதை சிக்கியதில் உயிரிழந்தான்.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெருவை சேர்ந்தவர் நிஜாம். இவர், வெளிநாட்டில் பணிபுரிகிறார். மனைவி, மகன் ரியாஸ், 5, ஆகியோர் நிஜாமின் பெற்றோருடன் வசித்தனர்.
ரியாசை, அவரது தாத்தா , கடைக்கு அழைத்துச் சென்று ரம்புட்டான் பழம் வாங்கி கொடுத்துள்ளார். மலைப்பகுதியில் மட்டும் விளையும் அந்த பழத்தின், தோலை நீக்கி, மேல்பகுதியை மட்டும் சாப்பிட வேண்டும். சிறுவன் அது தெரியாமல் பழத்தை விழுங்கியதால், விதை தொண்டையில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
குடும்பத்தினர் சிறுவனை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் சோதித்து, வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும்
-
கர்நாடகாவில் ஓடும் ரயிலில் பயங்கர தீவிபத்து; லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு
-
முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு
-
நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி: போட்டோ வைரல்
-
பயணிகள் சேவையில் டாப் ; முதல் இடத்தில் 3 விமான நிலையங்கள்
-
பொன்முடியின் ஆபாச பேச்சு; விசாரணைக்கு போலீசார் தயங்கினால் சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்; ஐகோர்ட் எச்சரிக்கை
-
'யங் இந்தியன் நிறுவனம் காங்கிரசின் மற்றொரு முகம்' நீதிமன்றத்தில் ஈ.டி., தகவல்