பெண்ணிடம் ஆபாச சைகை; போலீஸ்காரரிடம் விசாரணை

தென்காசி; சங்கரன்கோவில் அருகே பெண்ணிடம் ஆபாச சைகை காட்டியதாக, ஆயுதப்படை போலீஸ்காரரிடம் விசாரணை நடக்கிறது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கீழ அழகுநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார், 30; இவர், தென்காசி மாவட்ட ஆயுதப்படையில், காவலராக பணியாற்றி வருகிறார். அப்பகுதியில் உள்ள பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்ததை மறைந்திருந்து பார்த்துள்ளார்.

மேலும், அந்த பெண்ணை பார்த்து அவர் ஆபாச சைகை காட்டியதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த அந்த பெண், தன் கணவரிடம் கூறியுள்ளார். அவர் மனோஜ்குமாரை கண்டிக்கவே, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

குருவிகுளம் போலீசார், மனோஜ்குமாரிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement