நாய் கவ்விச்சென்ற சிசு; போலீஸ் மீட்டு விசாரணை

அரியலுார்; நாய் கவ்வி சென்ற சிசுவை, போலீசார் மீட்டனர்.

அரியலுார் மாவட்டம், செந்துறை அருகே அசாவீரன்குடி காடு, வடக்கு மாத்துார் சாலையில் சிமென்ட் ஆலைக்கு சென்ற டிப்பர் லாரி டிரைவர் ஒருவர், நாய் ஒன்று சிசுவை கவ்விச் சென்றதை பார்த்து, பொதுமக்களிடம் கூறியுள்ளார்.

பொதுமக்கள் நாயை துரத்திய போது, சிசுவை போட்டு விட்டு ஓடியது. குவாகம் போலீசார், இறந்த பெண் சிசுவை மீட்டு, அதிகாலையில் பிறந்த சிசுவாக இருக்கலாம் என, தெரிவித்தனர்.

சிசுவுக்கு உடலில் சில இடங்களில் காயம் இருந்தது. போலீசார் அரியலுார் அரசு மருத்துவமனைக்கு, சிசுவை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.

Advertisement