முதலிரவு அன்றே ஓடிப்போனவர் நிகிதா: முன்னாள் கணவர் திருமாறன்

1

திருப்புவனம்; அஜித்குமார் கொலை வழக்கில் புகார் கொடுத்த நிகிதாவின் முன்னாள் கணவர் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் திருமாறன் நேற்று மடப்புரம் வந்திருந்தார்.

அவர் கூறியதாவது: 2004ல் நிகிதாவை கல்யாணம் செய்தேன். அன்று பாலும் பழமும் சாப்பிட்ட முதல் இரவு அன்றே ஓடிவிட்டார். இவங்க குடும்பமே சீட்டிங் குடும்பம். அப்பா சப் கலெக்டர், அம்மா டீச்சர். கோயம்புத்தூரில் இருந்த எஸ்.பி., ஒருவர் இவங்களுக்கு பழக்கம். அதனால பல்வேறு சீட்டிங் வேலை செய்து வந்தாங்க ,

கண்டிப்பா இவங்க நகைய தொலைச்சுருக்கவே மாட்டாங்க. அஜித்குமார் பணம் கேட்ட பிரச்னை காரணமா இந்த பொய்யான புகாரை கொடுத்து அவங்க கிட்ட இருக்கிற பவரை வச்சு இந்த சம்பவத்தை நடத்தி இருக்காங்க.அவங்க மேல நாலு கல்யாண மோசடி வழக்கு இருக்கு. மதுரைல எனக்கும் அவங்களுக்கும் கல்யாணம் நடந்துச்சு. ஒரு நாள் கூட என்னுடன் வாழல. வரதட்சணை கேட்டதா வழக்கு போட்டு எங்க குடும்பத்தையே கோர்ட்ல நிறுத்தினாங்க. என்கிட்ட 10 லட்சம் வாங்கிட்டுதான் வழக்கை வாபஸ் வாங்கினாங்க. அவங்க நிறைய பொய் பேசுவாங்க... அந்த பொய்ய நம்புறமாதிரி பேசுவாங்க... போலீசார் நிகிதாவை பிடித்து நகை காணாமல் போனது உண்மையா என விசாரிக்க வேண்டும் என்றார்.

அர்ஜூன் சம்பத் தடுத்து நிறுத்தம்



அஜித்குமாரை கட்டி வைத்து அடித்த இடமான மடப்புரம் கோயில் அலுவலகம் பின்னால் உள்ள கோசாலைக்கு ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் செல்ல முயன்றார். நீதிபதி விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அங்கு யாருக்கும் அனுமதி இல்லை எனக்கூறி அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அர்ஜூன் சம்பத் கூறுகையில், கோயில் வளாகத்தில் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு உயிர் பறி போய் உள்ளது. 5 நாட்களாகியும் பரிகார பூஜை நடத்தவில்லை. உடனடியாக பரிகார பூஜை செய்ய வேண்டும், என்றார்

Advertisement