'மனித உயிர்களை மதிக்காத போலீஸ்': மார்க்சிஸ்ட் சண்முகம் தாக்கு
திருப்புவனம்,; சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரத்தில் போலீசார் தாக்கியதில் இறந்த கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து நேற்று மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆறுதல் கூறினார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் காவல்துறையினர் அத்துமீறல் தொடர்ந்து நடந்து வருகிறது. தி.மு.க., ஆட்சியில் 24 காவல்நிலைய மரணங்கள் நடந்துள்ளன.
அதில் தலைமைச் செயலகத்திலிருந்து யாரோ ஒருவர் அழுத்தத்தில் தான் இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது என எல்லோரும் பேசுகின்றனர். யார் அந்த அதிகாரி என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் தனிப்படை கலைக்கப்படுவதாக டி.ஜி.பி., அறிவித்துள்ளார்.
இதன் மூலம் இதுவரை எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோர் தனிப்படை என்ற ரவுடிக்கும்பலை வைத்து செயல்பட்டுள்ளது தெரிகிறது.
மனித உரிமைகளும், மனித உயிர்களும் எல்லாவற்றையும் விட மேலானது. அதனை காவு வாங்குதை ஏற்றுக்கொள்ள முடியாது. மதுரை உயர்நீதிமன்றம் தலையிட்ட பின்பு தான் வழக்கு வேகம் எடுத்துள்ளது. அதன்பின்னரே தமிழக முதல்வர் சி.பி.ஐ., க்கு மாற்றியுள்ளார்.
அஜித்குமார் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
இந்தியாவுக்கு எல்லை ஒன்று; எதிரிகள் 3 பேர்: ராணுவ துணை தளபதி
-
கர்நாடகாவில் ஓடும் ரயிலில் பயங்கர தீவிபத்து; லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தால் பெரும் சேதம் தவிர்ப்பு
-
முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு; த.வெ.க., செயற்குழுவில் அறிவிப்பு
-
நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி: போட்டோ வைரல்
-
பயணிகள் சேவையில் டாப் ; முதல் இடத்தில் 3 விமான நிலையங்கள்
-
பொன்முடியின் ஆபாச பேச்சு; விசாரணைக்கு போலீசார் தயங்கினால் சி.பி.ஐ.,க்கு மாற்றப்படும்; ஐகோர்ட் எச்சரிக்கை