காமராஜர் பிறந்த நாள் போட்டி கரூரில் வரும் 20ல் நடக்கிறது


கரூர், முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளையொட்டி வரும், 20ல் பேச்சு போட்டி நடக்கிறது.
இதுகுறித்து, கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க பி.ஆர்.ஓ., மேலை பழனியப்பன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:முன்னாள் முதல்வர் காமராஜரின், 123வது பிறந்த நாளையொட்டி வரும், 20ல் கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள, ஆர்யாஸ் ஓட்டலில் மதியம், 3:00 முதல் மாலை, 5:00 மணி வரை பேச்சு போட்டி நடக்கிறது. காமராஜர் கல்வி மற்றும் சமூக பணிகள் என்ற தலைப்பில், மூன்று நிமிடம் மட்டும் பேச வேண்டும். போட்டியில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.

தலைமையாசிரியர் ஓப்புதல் கடிதத்துடன் வரும், 15க்குள் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம், 72, சீனிவாசபுரம், கரூர்-639001 என்ற முகவரிக்கு, தபால் மூலம் அல்லது நேரில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 94435-93851 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும், 30 மாணவ, மாணவியருக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்படும். மூன்று பரிசுகள் தேர்வின் அடிப்படையில் வழங்கப்படும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement