அமலுக்கு வந்த பிக் பியூட்டில்புல் மசோதா; கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்திய டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 'ஒன் பிக் பியூட்டிபுல் பில்' என்ற வரிச்சலுகை மசோதாவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார்.
அதிபராக பொறுப்பேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டு வருகிறார். அவரின் செயல்பாடுகள் பற்றிய விமர்சனங்கள் எழும் போது, இது அமெரிக்காவின் முன்னேற்றத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ற அவரின் ஆதரவாளர்களின் தரப்பில் இருந்து பரவலாக கருத்துகள் எழுந்தது.
அமெரிக்காவில் வரிகுறைப்பு மற்றும் அரசின் கடன் உச்சவரம்பை கொண்டு வர ஒன் பிக் பியூட்டில்புல் பில் என்ற மசோதாவை டிரம்ப் அறிமுகம் செய்தார். இந்த வரிச்சலுகை மற்றும் குடியேற்ற மசோதாவை தமிழில் பெரிய அழகான வரி என்றும் அழைக்கலாம்.
இந்த மசோதாவின் முதல் வரைவு மே மாதம் வெளியிடப்பட்டது. அந்நாட்டு மேலவையில் ஒப்புதல் பெறப்பட்ட இந்த மசோதா கீழவையிலும் நிறைவேறியது. இதையடுத்து, இந்த மசோதாவை அதற்கான விழாவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் முறைப்படி கையெழுத்திட்டு நடைமுறைப்படுத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது;
இத்தனை மகிழ்ச்சியுடன் நமது நாட்டு மக்களை நான் இதற்கு முன் பார்த்தது இல்லை. நாங்கள் வாக்குறுதிகளை அளித்தோம். அவை நிறைவேற்றப்பட்டன. ஜனநாயகத்தின் பிறந்தநாளில் ஜனநாயகத்தின் வெற்றி இருக்கிறது, மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
போலீஸ் விசாரணையில் கோவில் காவலாளி மரணம்: காலை 8 மணிக்கே விசாரணையை தொடங்கிய நீதிபதி
-
அமர்நாத் யாத்திரையில் திடீர் விபத்து: 5 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் அதிர்ச்சி
-
உ.பி., யில் சோகம்! கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
-
நாட்டு வெடிகுண்டு தயாரித்து 'இன்ஸ்டா'வில் பதிவிட்ட 4 ரவுடிகள் கைது
-
தொழிற்சங்கம் போராட்டம் நடத்தினால் முதலீடு செய்ய யார் வருவர்: ஐகோர்ட் கேள்வி
-
சிறந்த சேவையாற்றியவர்களுக்கு விருது வழங்கி ஆசிர்வதித்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்