நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூலை 04) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:
பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷம்
திருப்பத்துார் மாவட்டம், பொன்னேரியை சேர்ந்த சந்தோஷ், 25, மற்றும் அதே பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுவன் ஆகியோர், ஜூன் 26ம் தேதி இரவு, 7:00 மணிக்கு டியூஷன் முடிந்து வீடு திரும்பிய, பிளஸ் 2 படிக்கும், 17 வயது மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று போக்சோ வழக்கில் சந்தோஷை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, 14 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.
தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
திருவண்ணாமலை மாவட்டம், மடிப்பாக்கத்தை சேர்ந்த தொழிலாளி சக்திகுமார், 29, கடந்த 2023 ஜூன், 2ல், 9 வயது சிறுமியை கடைக்கு பைக்கில் அழைத்து சென்று, பாலியல் சில்மிஷம் செய்தார். செய்யாறு மகளிர் போலீசார் விசாரித்து, சக்திகுமாரை கைது செய்தனர்.
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காஞ்சனா விசாரித்து, நேற்று முன்தினம் மாலை, சக்திகுமாருக்கு ஏழாண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
காமுக தந்தைக்கு காப்பு
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே கிராமத்தை சேர்ந்த, 45 வயது விவசாயிக்கு, இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. 17 வயதாகும் இரண்டாவது மகளுக்கு வாய் பேச முடியாது.
அவரது தந்தை, மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வயிற்று வலி ஏற்பட்டதால், பாட்டியுடன் அரசு மருத்துவமனைக்கு சிறுமி சென்ற போது, பரிசோதனையில் அவர் ஏழு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அவரது தந்தையை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

மேலும்
-
உலக போலீஸ் விளையாட்டு போட்டி; பதக்கம் குவித்த இந்திய வீராங்கனை
-
டிரம்ப் விதித்த காலக்கெடு: ஜோதிடம் சொல்கிறார் ராகுல்!
-
ஜூலை 7 முதல் சுற்றுப்பயணம்; இ.பி.எஸ்.,க்கு Z பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கியது மத்திய அரசு!
-
அந்த நாள் ஞாபகம் வந்ததே; வயலில் இறங்கி நாற்று நட்ட உத்தரகண்ட் முதல்வர்
-
போலீஸ் விசாரணையில் கோவில் காவலாளி மரணம்: காலை 8 மணிக்கே விசாரணையை தொடங்கிய நீதிபதி
-
அமர்நாத் யாத்திரையில் திடீர் விபத்து: 5 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் அதிர்ச்சி