நீதிபதிகள் குடியிருப்பு கட்ட அடிக்கல்

பவானி, பவானி ஊராட்சிக்கோட்டை மலை அடிவாரத்தில், 3.89 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் குடியிருப்பு கட்டடம் கட்டும் பணிக்கு, நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி சமீனா, கலெக்டர் கந்தசாமி பணியை தொடங்கி வைத்தனர். இதை தொடர்ந்து குடியிருப்பு கட்டும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, பவானியில் ஒரு திருமண மண்டபத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.

Advertisement