சிவன்மலை அருகே ஒருவருக்கு 'டெங்கு'

காங்கேயம்,காங்கேயத்தை அடுத்த சிவன்மலை ஊராட்சி பெருமாள்மலையை சேர்ந்தவர் மகேஸ்குமார், 40; ஒரு வாரத்துக்கு முன் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், டெங்கு காய்ச்சல் என தெரிய வந்தது.

இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பெருமாள்மலை கிராமத்தில் மருத்துவ குழு அமைத்து பரிசோதனை செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement