மனைவி, க.காதலனுக்கு தர்ம அடி கணவர் உள்பட 4 பேருக்கு 'காப்பு'
ஆட்டையாம்பட்டி, நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி, சந்தைப்பேட்டை தெரு, பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியை சேர்ந்த, செல்வம் மகன் மணி, 28. இவர், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி, ரத்தினவேல் காடு, சந்திரா தியேட்டர் பகுதியில் வசிக்கும் அண்ணாமலை மனைவி லட்சுமி, 32, என்பவருடன் நெருக்கமாக பழகி வந்தார்.
இந்நிலையில் கடந்த, 1ல் வீட்டை விட்டு வெளியேறிய லட்சுமி, மணியுடன், அவரது வீட்டில் தங்கி இருந்தார். இதை அறிந்த அண்ணாமலை, நேற்று உறவினர்களுடன் சென்று, மணி, லட்சுமியிடம் சமாதானம் பேசி, இருவரையும், ஆட்டையாம்பட்டி, இருசனாம்பட்டிக்கு அழைத்து வந்தார். தொடர்ந்து அங்கு ஒருவர் வீட்டில், இருவரையும் அடைத்து வைத்து சரமாரியாக தாக்கினர்.
சத்தம் கேட்டு திரண்ட அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு, நைனாம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மணி வாக்குமூலப்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, அண்ணாமலை, 37, அவரது உறவினர்கள் மாரியப்பன், 40, சந்தோஷ், 30, கோகுல், 25, ஆகியோரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
இத்தாலியில் கேஸ் நிரப்பும் நிலையம் வெடித்துச் சிதறி விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்
-
பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி; டிரினிடாட் அண்டு டொபாகோ பார்லி.,யில் பிரதமர் மோடி பேச்சு
-
அரசு மருத்துவமனையில் கழிவுநீர் பிரச்னை
-
உத்தராகண்ட்டில் கனமழை இரு விமானப்படை வீரர்கள் பலி
-
பருவமழையை எதிர்கொள்ள உயிரியல் பூங்காவில் ஏற்பாடு
-
10ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு