பிளாஸ்டிக் எதிர்ப்பு ஊர்வலம்

பழநி: பழநியில் பிரில்லியன்ட் கிட்ஸ் குரூப் ஆப் ஸ்கூல்ஸ் சார்பில் பிரில்லியன்ட் கிட்ஸ் பிரைமரி பள்ளி, குளோபல் சி.பி.எஸ்.சி., பள்ளி செயல்பட்டு வருகின்றன.

இப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்கும் விழிப்புணர்வு ஊர்வலம் பஸ் ஸ்டாண்ட் அருகே மயில் ரவுண்டானா பகுதியில் துவங்கியது. திண்டுக்கல் ரோடு, புது தாராபுரம் ரோடு வழியாக மயில் ரவுண்டானா பகுதியை அடைந்தது.

பள்ளி தாளாளர் தேவகிவேணுகோபால், முதல்வர் ராதா, அறங்காவலர்கள் மகாலட்சுமி, சிவகுமார், நிர்வாக அலுவலர் தினேஷ்குமார் கலந்து கொண்டனர்.

Advertisement