அஜித்குமார் குடும்பத்திற்கு பா.ஜ., ரூ.5 லட்சம் நிதி உதவி

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினரை பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆறுதல் கூறி, கட்சி சார்பாக5 லட்சம் ரூபாய் வழங்கினார்.

பின் அவர் கூறியதாவது:



அஜித்குமார் மரண பிரச்னையை பா.ஜ., தான் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. பாதிக்கப்பட்ட அஜித்குமார் குடும்பத்துக்கு, அரசு உதவியாக இடம் வழங்கி உள்ளனர். அது, அவர்கள் வீட்டில் இருந்து 7 கி.மீ., தூரம் தள்ளி அமைந்துள்ளது. ஆக, கண் துடைப்புக்காக உதவி செய்துள்ளனர். இந்தத் தவறையும் மன்னிக்க முடியாது.



மனிதாபிமானமற்ற முறையில் தினந்தோறும் போலீசாரால் அரங்கேற்றப்படும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு, பொதுமக்கள் விரைவில் நீதி வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement