இன்னும் 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்; சொல்கிறார் 90 வயதான தலாய் லாமா!

9


புதுடில்லி: "இன்னும் 30 முதல் 40 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன்," என 90 வயதான தலாய் லாமா தெரிவித்து உள்ளார்.


திபெத்தை சேர்ந்த புத்த மதத்தலைவர் தலாய் லாமா, சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து ஹிமாச்சல பிரதேசத்தில் வசித்து வருகிறார். அவருக்கு நாளை (ஜூலை 06) 90 வது பிறந்த நாள்.


இதையொட்டி, இன்று (ஜூலை 5) ஹிமாச்சலபிரதேசத்தின் மேக்லியாட் கஞ்ச் பகுதியில் உள்ள புத்த மத வழிபாட்டு தலத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பிரார்த்தனை நிகழ்ச்சியில் தலாய் லாமா கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:


இன்னும் 30 அல்லது 40 ஆண்டுகளுக்குமேல் வாழ விரும்புகிறேன். உங்கள் பிரார்த்தனைகள் இதுவரை பலனளித்துள்ளன. நாட்டை நாம் இழந்தபோதும், நாம் இந்தியாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறோம்.


தர்மசாலாவில் வாழும் மக்களுக்கு நான் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்படுவதை பலமுறை உணர்ந்துள்ளேன்.
என்னால் முடிந்தவரை மக்களுக்கு நன்மையும், சேவையும் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement