அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: இரு தரப்பு உறவு குறித்து ஆலோசனை

பியூனஸ் அயர்ஸ்: அர்ஜெனடினா அதிபர் ஜேவியர் மிலே அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி , அவரை சந்தித்து பேசினார்.


கானா, டிரினிடாட் & டுபாகோ நாடுகளை தொடர்ந்து 3வது நாடாக, அர்ஜென்டினாவுக்கு அந்நாட்டு அதிபர் ஜேவியர் மிலே அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து லத்தீன் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா, சிலி மற்றும் பெரு ஆகிய நாடுகள் ஸ்பெயின் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று தந்த தலைவரான ஜோஸ் டி சான் மார்ட்டின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்த இடத்திற்கு பிரதமர் மோடி செல்வது என்பது, சர்வதேச சுதந்திர போராட்ட வீரர்களுக்கும். சுதந்திரம் மற்றும் இறையாண்மையை இந்தியா மதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து , அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை , அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேவை கட்டியணைத்து வரவேற்றார். பிறகு இரு தலைவர்களும் அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி கையசைத்தனர்.

பிறகு, இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய் மற்றும் காஸ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு, மக்களுக்கு இடையிலான தொடர்பு குறித்து ஆலோசித்தனர்.

இந்த சந்திப்பின் போது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement