வெங்காயம் கொள்முதலில் ஊழல் மத்திய அரசு தலையிட வலியுறுத்தல்

மும்பை:உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வெங்காயம் கொள்முதலில் ஊழல்
நடப்பதால், வேளாண் விளைபொருள் சந்தைக் குழு வாயிலாக நேரடியாக வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.



மஹாராஷ்டிர விவசாயி கள் கூட்டமைப்புகள் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு ஆகியவை பதிவு செய்யப்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக வெங்காயம் கொள்முதலில் ஈடுபட்டு வருகின்றன.

விலை கிடைப்பதில்லை



எப்.பி.ஓ., எனப்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக வெங்காயம் கொள்முதல் செய்யப்படும் போது, உள்ளூர் மட்டத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது. இதனால்,
நேர்மையான விவசாயிகள் பலருக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை.இந்த அமைப்பு, விவசாயிகளை விட இடைத்தர கர்களுக்கே அதிகளவில் பலன்களை அளிப்பதற்கு
செயல்படுகிறது. இதற்கு பதிலாக, ஏ.பி.எம்.சி., எனும் வேளாண் விளைபொருள் சந்தைக் குழு வாயிலாக நேரடியாக கொள்முதல் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.


இதனால் திறந்த சந்தை விலை, போட்டி அதிகரித்து, வெளிப்படைத்தன்மை ஏற்படும். இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலையை பெற முடியும்.

தலையிட வேண்டும்உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வாயிலாக கொள்முதல் என்பது, அதன் உண்மையான நோக்கத்தில் இருந்து மாறி விட்டது. மத்திய அரசு, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.



வெங்காயம் கொள்முத லில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, வேளாண் விளைபொருள்
சந்தைக் குழுவுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், கொள் முதல் வழிகாட்டுதல்களை
மாற்றியமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




@block_Y@

3 லட்சம் டன் கொள்முதல் இலக்கு





நடப்பு நிதியாண்டுக்கான விலை நிலைப்படுத்தும் நிதியத்தின் கீழ், விவசாயிகளிடம் இருந்து சந்தை விலையில், வெங்காயம் கொள்முதலை மத்திய அரசு துவங்கியுள்ளது. தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு ஆகியவை வாயிலாக, 1 கிலோ வெங்காயம் 16.75 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வருகிறது. பண்டிகை சீசனையொட்டி, விலை உயர்வை தடுக்க 3 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல் செய்து இருப்பு வைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.block_Y

Advertisement