கூகுள் குட்டப்பாவிற்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி பெரியப்பா வந்தாச்சுப்பா!

5


தற்போது இணையத்தில் பல தேடுதல் இயந்திரங்கள் வந்து விட்டாலும், கூகுள் தான் கோலோச்சி நிற்கிறது. அதற்கு போட்டியாக, பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) என்றொரு அந்த தேடுதல் இயந்திரம் வந்திருக்கிறது.


2022ல் துவக்கப்பட்ட இது, செயற்கை நுண்ணறிவு வாயிலாக இயங்குகிறது. நிகழ்நேர பதில்களை வழங்குவதன் வாயிலாக, கூகுள்-க்கு ஒரு தீவிர சவாலாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. Nvidia மற்றும் Amazon நிறுவனர் ஜெப் பெசோஸ் போன்ற முதலீட்டாளர்களின் ஆதரவுடன், இந்த ஸ்டார்ட்அப் விரைவாக உலகளவில் பெரும் புகழ் பெற்று வருகிறது.

இதன் சிறப்பம்சம் என்னவென்றால், தகவல்களைக் கண்டுபிடித்து மக்களுக்கு தரும் முறை சிறிது வித்தியாசமாக இருப்பதே. நீங்கள் ஏதாவது இணையத்தில் தேடினால், பல இணைப்பு களைக் காட்டும் நிலையில், Perplexity ஆனது நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களுடன், உரையாடல் வடிவில் துல்லியமான பதில்களை வழங்குகிறது.



எந்த கேள்வியைக் கேட்டாலும், அது இணையத்தில் தேடி, அணுகக்கூடிய, உரையாடல் பாணியிலான மற்றும் சரிபார்க்கக்கூடிய பதிலைக் கொடுக்கிறது. இதனால், உங்கள் விலை மதிப்பற்ற நேரத்தைச் சேமிக்கிறது.

முக்கிய அம்சங்கள்




* நேரடி பதில்கள் (Direct Answers): பல வலைப்பக்கங்களுக்குச் சென்று தகவல்களைத் தேடுவதற்குப் பதிலாக, Perplexity பல ஆதாரங்களில் இருந்து தகவல்களை ஒருங்கிணைத்து விரிவான பதில்களை வழங்குகிறது.

* நிகழ்நேரத் தகவல் (Current Information): கேள்விகளைக் கேட்கும்போதே, அது வலைத்தளத்தில் இருந்து நிகழ்நேரத்தில் உள்ள தகவல்களைப் பெற்று, புதுப்பித்த பதில்களை உறுதி செய்கிறது.



* நம்பகமான ஆதாரங்கள் (Reliable Sources): அனைத்து பதில்களுக்கும் நம்பகமான செய்தி நிறுவனங்கள், கல்வி வெளியீடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உள்ளடக்க ஆதாரங்களில் இருந்து மேற்கோள் மற்றும் இணைப்பு வழங்கப்படுகிறது.


* உரையாடல் அணுகுமுறை (Conversational Approach): இந்த சர்ச் இஞ்சின் ஒரு உரையாடல் பாணியில் செயல்படுகிறது. நீங்கள் கூடுதல் கேள்விகளைக் கேட்கலாம், மேலும் அது உங்கள் உரையாடலின் அடிப்படையில் மேலும் தகவல்களை வழங்குகிறது.


* சுருக்கத்தில் கவனம் (Focus on Brevity): இது சிக்கலான தலைப்புகள் அல்லது நீளமான கட்டுரைகளைச் சுருக்கி, அனைத்தையும் படிக்க தேவையில்லாமல் முக்கிய அம்சங்களை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது.

Perplexity-ன் பலவீனம் விரிவான ஆய்வுக்கான வசதிகள் இல்லை. இது சுருக்கமான பதில்களை வழங்கினாலும், நீங்கள் என்ன தேடுகிறீர்கள் என்று சரியாகத் தெரியாத மற்றும் பல்வேறு வகையான ஆதாரங்களை விரும்பும் தேடல்களுக்கு கூகுள் போல இருக்காது.

இணையதளம்: https://www.perplexity.ai/


சந்தேகங் களுக்கு: இ-மெயில்: sethu raman.sa thappan@gmail.com.


மொபைல் போன்: 98204 - 51259.


இணைய தளம்: https://startupandbusinessnews.com/

- சேதுராமன் சாத்தப்பன் -

Advertisement