வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன்

கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், நலம் குறித்த யூகங்கள் மற்றும் அதன் உண் மைகள் குறித்து விளக்கம் விக்கும், 'நலந்தானா, நம் கையில்' என்ற நிகழ்ச்சி, கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று நடந்தது. இதில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
சென்னை ஆரோக்யா சித்த மருத்துவமனை மூத்த மருத்துவர் கு.சிவராமன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது: மருத்துவங்கள் குறித்து சமூக ஊடகங்களில் யூகத்தின் அடிப்படையில் அதிகமான கருத் துக்கள் பரவுகிறது. சமூக ஊடகத்தில் தகவல் தேடுவது தவறல்ல; ஆனால் அதில் கூறப்படும் தகவல்கள் அனைத்தும் உண்மையானதா, சரியானதா என்று பார்க்க வேண்டும். அறிவு என்பது வேறு, தகவல் என்பது வேறு.
மருத்துவம் தொடர்பான தவறான தகவல்கள் வேகமாக பரவுவதால் சிக்கலை ஏற்படுத்துகிறது. கொரோனா தடுப்பூசி பற்றி சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற் படுத்துகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கு குறைந்த செலவில் மருந்து கண்டுபிடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவறான தகவலை பரப்பினர்.
ஆனால், நீதிமன்றம் அனுமதி அளித்ததால், குறைந்த செலவில் புற்றுநோய் மருந்து கிடைக்கிறது. அரசியல் ரீதியாக தவறான தகவல் பரப்பினால் கடந்து போய்விடலாம். ஆனால் மருத்துவம் தொடர்பாக தகவல்கள் அப்படியல்ல, அவற்றை நம்புவதால் தவறுகள் நடக்கிறது. மருத்துவ துறை சார்ந்து சமூக ஊடகங்களில் வரும் செய்திகளில் அதிக பிழைகள் மண்டிகிடக்கிறது.
ஒருவருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்கலாம். பாதிக்கப்பட்டவருக்கு எந்த மருந்து தேவை என்பதை மருத்துவர்கள் தான் கூற வேண்டும். தற்போது, கூகுள் மருத்து வர்கள் அதிகரித்து விட்டனர். மருத்துவ துறை பற்றி கூகுளில் தேடும் எல்லா தகவல்களையும் நம்பாதீர்கள். இவ்வாறு சிவராமன் பேசினார்.
அதை தொடர்ந்து, நீரிழிவு நோய் நம்பிக்கையும், நிஜங்களும் என்ற தலைப்பில், சென்னை செந்தூர் நீரிழிவு சிகிச்சை மருத்துவமனை டாக்டர் சண்முகம், பெண் ஆரோக்கியம் குறித்து சென்னை மித்ராஸ் பவுண்டேசன் டாக்டர் அமுதாஹரி, திருப்பூர், வாழ்வியல் நோய் சிகிச்சையில் ஆயுர்வேதம் என்ற தலைப்பில், முத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் சுடர்கொடி ஆகியோர் பேசினர்.











மேலும்
-
முதல்வர் சித்தராமையாவை மாற்ற காங்கிரஸ் திட்டம்; பா.ஜ., முன்னாள் முதல்வர் சொல்வது இதுதான்
-
2 அரசு பள்ளிகளுக்கு பெயிண்ட் அடிக்க 443 பேர்; போலி ரசீதால் அம்பலமான மோசடி
-
திருமா இன்றைய கேள்வி: வழக்கம்போல் எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்.,க்கு குறி!
-
22 நாட்களுக்குப் பிறகு நகர்த்தப்பட்ட பிரிட்டீஷ் போர் விமானம்; நிபுணர்கள் குழு ஆய்வு
-
சிருங்கேரி சாரதா பீடம் ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் ராமேஸ்வரத்தில் வழிபாடு!
-
தலாய் லாமாவுக்கு தனது வாரிசை தேர்ந்தெடுக்க அதிகாரம் இல்லை; மீண்டும் வம்புக்கு இழுக்கும் சீனா!