அரசு மனநல காப்பகத்தில் குணமான இருவர் வீட்டிற்கு அனுப்பி வைப்பு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு உட்பட்ட, கிருஷ்ணகிரி நகரில் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் கடந்த, 10 மாதங்களாக மனநலம் சிகிச்சை பெற்று, தற்போது முழு நலன் பெற்ற, மத்திய பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களை சேர்ந்த இருவருக்கு, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வாழ்த்து தெரிவித்து, அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “கிருஷ்ணகிரி நகரிலுள்ள அரசு மருத்துவக் கல்லுாரி அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் மற்றும் ஆதரவற்றவர்களுக்கான மனநல காப்பகம் கடந்த ஓராண்டுக்கு முன் துவங்கப்பட்டது.
கடந்த ஓராண்டு காலமாக இம்மையத்தில், 55 மனநலம் பாதித்தவர்களை மீட்டு சிகிச்சையளித்து, அவர்களில், 36 பேர் அவர்களின் குடும்பத்துடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஓராண்டாக மருத்துவக் குழுவினர் மற்றும் தொண்டு நிறுவனத்தின் 357 ஆதரவற்ற நபர்களை சந்தித்து, போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கடந்த, 10 மாதங்களுக்கு முன் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே மீட்கப்பட்ட, மத்திய பிரதேசம் மாநிலம் சிவபுரியை சேர்ந்த ஜீவன், குந்தாரப்பள்ளி அருகே மீட்கப்பட்ட, பீஹாரை சேர்ந்த கிஷோர் ஆகியோர், இம்மையத்தில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து, அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்,” என்றார்.
அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் பூவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மது, மனநல மருத்துவர்களான டாக்டர்கள் வாணிஸ்ரீ, ஸ்ரீவித்யா, மலர்விழி, முனிவேல் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன் பேச்சு
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்