பி.எம்.சி., டெக் கல்லுாரி வளாகத்தில் இயங்கும் இந்திராகாந்தி பல்கலை.,யில் மாணவர் சேர்க்கை
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இன்ஜினியர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில், புதுடில்லி இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலை., படிப்பு மையம், (எண்:2534) 20 ஆண்டுக்கு மேலாக செயல்படுகிறது. இங்கு, நடப்பு கல்வியாண்டிற்கு இளங்கலை படிப்புகளான பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.எஸ்.டபள்யூ., பி.சி.ஏ., மற்றும் முதுநிலை படிப்புகளான எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்.டபள்யூ., எம்.ஏ., (சைக்காலஜி), எம்.சி.ஏ., எம்.பி.ஏ., படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.
மேலும், 6 மாத சான்றிதழ் படிப்புகளும் இம்மையத்தில் உள்ளது. அதற்கான மாணவர் சேர்க்கையும் நடக்கிறது. எஸ்.சி., எஸ்.டி., மாணவ, மாணவியருக்கு அனைத்து படிப்புகளுக்கும், 50 சதவீதம் மட்டும் சேர்க்கை கட்டணமாக செலுத்தினால் போதும். எவ்வித வயது வரம்பும் யாருக்கும் கிடையாது.
வீட்டிலிருந்தோ, பணி செய்யும் இடத்திலிருந்தோ தொலைத்துார கல்வியாக சேர்ந்து படிக்கலாம். இணையதளம் மூலம் மட்டுமே சேர்க்கைக்கு பதிவு செய்ய முடியும். இப்படிப்புகளுக்கு, மத்திய, மாநில அரசுகளால் அங்கீரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாணவ, மாணவியருக்கு ஆலோசனை வகுப்புகள் நடத்தப்படும்.
மேலும் விபரங்களுக்கு, கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுதாகரன் என்பவரை, 99408 61202 என்ற எண்ணிலும், கைலாசம் என்பவரை, 99428 50720 என்ற எண்ணிலும் அணுகலாம்.
மேலும்
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
'கூகுள்' குட்டப்பாவுக்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி' வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன் பேச்சு
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்
-
பா.ம.க., நிர்வாக குழுவில் அன்புமணி நீக்கம்: புதிய குழுவை அறிவித்தார் ராமதாஸ்
-
இந்தியாவில் டாக்டராக பதிவு செய்வதில் சிக்கல்: வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் போராட்டம்