குழாய் உடைந்து குடிநீர் வீண்

பவானிசாகர், பவானிசாகர் அணையிலிருந்து தொட்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம், பத்துக்கும் மேற்பட்ட பஞ்., மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. பவானிசாகர்-புன்செய்புளியம்பட்டி சாலையில் பிரதான குழாய் செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் உடைந்து குடிநீர் வீணாகிறது.

தற்போது பவானிசாகர்-நால்ரோடு வனப்பகுதி சாலையில் மூன்று இடங்களில் குழாய் உடைந்து சில நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் தார்ச்சாலையும் சேதமடைந்து பள்ளமாகி விட்டது. தரமான குழாய் அமைக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முன்வர கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement