அ.பாளையம்-க.புதுார் இடையே பவானி ஆற்றில் பாலம் அமையுமா?



பவானி, அத்தாணி அருகே அம்மாபாளையம் பஞ்., அம்மாபாளையத்தில், 500க்கும் மேற்பட்ட குடுபங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியினர் பவானி ஆற்றில் பரிசல் மூலமே பிற இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதற்காக அம்மாபாளையத்தில் இருந்து பவானி ஆற்றில் பரிசல் இயக்கப்படுகிறது.


நபர் ஒருவருக்கு பத்து ரூபாய் கொடுத்து, அக்கரையில் உள்ள கருல்வாடிப்புதுார் சென்று, அங்கிருந்து பஸ் அல்லது பிற வாகனம் மூலம் பயணத்தை தொடர வேண்டும். பவானி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தால், பரிசல் போக்குவரத்து தடைபட்டு விடும். அப்போது மேவாணி வழியாக, ௮ கி.மீ., துாரம் சென்று, கீழ்வாணி, மூங்கில்பட்டிக்கு சென்று பிற இடங்களுக்கு செல்கின்றனர். பவானி ஆற்றின் நடுவில் பாலம் கட்டினால், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement