'குறிக்கோளுடன்  கல்லுாரி வாழ்வை துவக்குங்கள்'

கோவை : பெரியநாயக்கன்பாளையம், யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கணினி அறிவியல் மற்றும் கலை துறைகளைச் சேர்ந்த முதலாண்டு மாணவர்களுக்கு துவக்க விழா நடந்தது. யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.

யுனைடெட் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவியான, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர் ஹர்ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ''குறிக்கோளை நிர்ணயித்து கல்லுாரி வாழ்க்கையை மாணவர்கள் துவக்க வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, மாணவர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் '' என்றார்.

யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் விஜயா, துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisement