உள்ளூர் வர்த்தக செய்திகள்


* ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 50,319 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 55.60 ரூபாய் முதல், 7௩ ரூபாய் வரை, 20,184 கிலோ தேங்காய், 12.௦௭ லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த எள் ஏலத்துக்கு, 653 மூட்டை வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 80.29 முதல், 144.23 ரூபாய்; சிவப்பு ரகம், 69.60 முதல் 136.86 ரூபாய் வரை, 48,006 கிலோ எள், 38.௭௦ லட்சம் விலை போனது.
* கோபி அருகே மொடச்சூரில் பருப்பு மற்றும் பயிர் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று கூடியது. துவரம் பருப்பு (கிலோ), 110 முதல், 120 ரூபாய், குண்டு உளுந்து, பாசிப்பருப்பு, பச்சைப்பயிர், தலா 120 ரூபாய்க்கும் விற்பனையானது. வெந்தயம், கடுகு, தலா 100 ரூபாய்க்கும் விற்பனையானது. கொள்ளு, 70, தட்டைப்பயிர், 100, பொட்டுக்கடலை, 110, சீரகம், 360, மல்லி, 140, கருப்பு சுண்டல், 90, வெள்ளை சுண்டல், 100, வரமிளகாய், 180, புளி, 170, பூண்டு, 100 ரூபாய் முதல், 180 ரூபாய் வரையும் விற்பனையானது.
* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 5,491 மூட்டைகளில், ௨.௫௮ லட்சம் கிலோ கொப்பரை வரத்தானது. முதல் தரம் கிலோ, 227.15-258 ரூபாய்; இரண்டாம் தரம், 6௧-252.65 ரூபாய் வரை, ௬.௨௦ கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* பவானி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 1,926 காய் வரத்தானது. ஒரு காய், 22.50 - 32.10 ரூபாய் வரை, 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.
* கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. நாட்டு சர்க்கரை முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டையாக, 2,910 ரூபாய் முதல், 2,955 ரூபாய்க்கு விற்பனையானது. இரண்டாம் தரம் (மீடியம்) 2,670 ரூபாய் முதல், 2,715 ரூபாய் வரை விற்றது. வரத்தான, 1,750 நாட்டு சர்க்கரை மூட்டைகளும், 47.69 லட்சம் ரூபாய்க்கு விற்றது. உருண்டை வெல்லம், 50 மூட்டை (30 கிலோ) வரத்தானது. ஒரு மூட்டை, 1,620 ரூபாய்க்கு விற்றது. நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 48.50 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்தது.
* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 24,701 தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 80.20 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 54.40 ரூபாய்க்கும்,ஏலம் போனது. மொத்தம், 10 டன் தேங்காய், 6.௩௧ லட்சம் ரூபாய்க்கு விற்றது. இதேபோல் கொப்பரை ஏலத்துக்கு, 1,511 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. கிலோ, 140.20 ரூபாய் முதல் 247.30 ரூபாய் வரை, 3.60 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

Advertisement