பணி பாதுகாப்பு குறித்து போலீசாருக்கு அறிவுரை



ஈரோடு, பெண் போலீசாருக்கு பணி பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம், --ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது. எஸ்.பி., சுஜாதா தலைமை வகித்தார்.


போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அனுராதா, கவிதாலட்சுமி, ராஜநளாயினி பேசினர். பெண் போலீசார் பணியில் இருக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை, பணியில் ஆபத்து நேரிட்டால் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை, மன உளைச்சல் இருந்தால் உயரதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கவும் ஆசோனை வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், ஏட்டுகள், போலீசார் கலந்து கொண்டனர்.

Advertisement