மின்சாரம் தாக்கியதில் கட்டட தொழிலாளி பலி

கரூர், கரூர் அருகே, கட்டட வேலை செய்து கொண்டிருந்த போது, மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தார்.மாயனுார் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல், 41, கட்டட தொழிலாளி. இவர், வெங்கமேட்டை சேர்ந்த செல்வராஜ், 30, என்பவருடன் சேர்ந்து கடந்த, 3ல், கரூர் செங்குந்தபுரத்தில் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.


அப்போது, கட்டடத்தின் மாடி பகுதிக்கு, இரும்பு கம்பிகளை இரண்டு பேரும் துாக்கி சென்ற போது, மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கியது. அதில், படுகாயம் அடைந்த வெற்றிவேல், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உயிரிழந்தார். செல்வராஜ் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement