வாகனம் மோதி முதியவர் சாவு



தாராபுரம்தாராபுரம், கிறிஸ்தவ அனுப்பு தெருவை சேர்ந்தவர் அபூபக்கர், 70; நேற்று முன்தினம் நள்ளிரவில், காளிபாளையம் அருகே சாலையில் நடந்து சென்றார்.

காட்டம்மன் புதுாரை சேர்ந்த கார்த்திக், 24, ஓட்டி வந்த டாடா ஏஸ் வாகனம், அபூபக்கர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்தவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை இறந்தார்.

Advertisement