வாரச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை



கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்பட்டி சந்தையூர் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் செயல்படுகிறது.

நேற்று நடந்த சந்தையில் காலை நேரங்களில் ஆடு, கோழிகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டன. ஆடு, கோழிகளின் வரத்து அதிகமாக இருந்தது. 7 கிலோ கொண்ட ஆடு ஒன்று, 6,500 ரூபாய், நாட்டுக்கோழி கிலோ, 450 ரூபாய்க்கு விற்றது.ஆடு, கோழிகளை குளித்தலை, லாலாப்பேட்டை, தோகைமலை, புலியூர், சேங்கல், பஞ்சப்பட்டி பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

Advertisement