மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலி

வந்தவாசி, வந்தவாசி அருகே, வயலில் அமைத்த மின்வேலியில் சிக்கி கூலித்தொழிலாளி பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அதியனுாரை சேர்ந்தவர் விவசாயி சாமிக்கண்ணு, 48.


இவரது விவசாய நிலத்தில் இருந்த நெற்பயிரை, எலி மற்றும் காட்டுப்பன்றி நாசம் செய்து வந்ததால், இதை தடுக்க, வயலில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தார். அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளி குப்பன், 43, நேற்று அதிகாலை சாமிகண்ணு நிலத்தின் வழியாக சென்றபோது, மின்வேலியில் சிக்கியதில் பலியானார். கீழ்கொடுங்காலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement