செங்கை புதிய பேருந்து நிலைய பணிக்காக 3 ஏக்கர் குளம் மண் கொட்டி துார்ப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலைய பணிக்காக, 3 ஏக்கர் பரப்பளவிலான குளத்தில் மண் கொட்டி துார்க்கப்பட்டுள்ளது. புறநகர் பேருந்து நிலையத்தில் குளம் முறையாக பராமரிக்கப்படும் பேருந்து நிலையத்தில் வெளியேறும் கழிவு நீர் சுத்திகரிக்கப் பட்டு வெளியேற்றப்படும் என, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் மற்றும் முதன்மை செயலர் பிரகாஷ் கூறினார்.

வலியுறுத்தல்



செங்கல்பட்டு நகரில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, புதிய பேருந்து நிலையம், அரசு போக்குவரத்து கழக பணிமனை ஆகியவற்றை, நகருக்கு வெளியே அமைக்க வேண்டும் என, அரசிடம், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து, ஆலப்பாக்கம் ஊராட்சியில், மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், அரசு மருத்துவக்கல்லுாரிக்கு சொந்தமான 9.95 ஏக்கர் நிலத்தில், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம், அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்பின், செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க, 130 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து, மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், செங்கல்பட்டு புதிய பஸ் நிலைய பணிக்கு, முதல்வர் ஸ்டாலின் 2023 நவ., 15ம் தேதி, காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி, பணியை துவக்கி வைத்தார். அதன்பின், பேருந்து நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணியை, ஹந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு கடந்த 3ம் தேதி ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

ஆய்வின்போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் மற்றும் முதன்மை செயலர் பிரகாஷ், கலெக்டர் சினேகா, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புறநகர் பேருந்து நிலையம் 10 ஏக்கர் பரப்பளவில், 130 கோடி ரூபாய் மதிப்பிட்டில், முதல்வர் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது.

இந்த பேருந்து நிலையம், இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்போது, 600க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் வந்து செல்ல வாய்ப்பு உள்ளது.

நவீன வசதி



ஒரே நேரத்தில், 57 பேருந்துகள் நிற்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, வசதிகள், திடீரென உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவமனை வசதி, உணவகங்கள், தாய்மார்களுக்கு பாலுாட்டும் அறைகள், இவை அனைத்தும் நவீன நாகரிக வசதிகள் மற்றும் பயணியரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகள், விழுப்புரம், திருச்சி, பெங்களூரு, ஓசூர் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் வழித்தடங்களை பின்பற்றும்.

மாமல்லபுரம் பேருந்து நிலைய பணிக்கு, புவியியல் அமைப்பு (ஏஎஸ்ஐ) சார்ந்த அனுமதிக்காக அத்தியாவசியமான தகவல்களை எங்கள் துறையின் செயலர், உறுப்பினர் செயலர் மூலம், ஏ.எஸ்.ஐ., அலுவலகத்தில் சமர்பித்து அனுமதி பெற்றுள்ளோம்.

பேருந்து நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.




@block_Bblock_B@

குளம் சீரமைக்கப்படும்

block_B புறநகர் பஸ் நிலையம் அமைய உள்ள மையப்பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்பு, மலையடி வேண்பாக்கம் சர்வே எண் 70ல், 3 ஏக்கருக்கு மேல் குளம் உள்ளது. தற்போது, புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவங்கியபோது, குளத்தை மண்போட்டு மூடி வீட்டனர். நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை மீறி, குளம் துார்க்கப்பட்டுள்ளது. குளத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர், செயலர் மற்றும் முதன்மை செயலர் பிரகாஷ் கூறியதாவது: புறநகர் பேருந்து நிலையத்தில் குளம் முறையாக பராமரிக்கப்படும். பேருந்து நிலையத்தில் வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, வெளியேற்றப்படும் இவ்வாறு, அவர் கூறினார். block_B

Advertisement