இணைப்பு சாலை சீரமைக்க கோரிக்கை

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் --- ஸ்ரீபெரும் புத்துார் நெடுஞ்சாலை 25 கி.மீ., உள்ளது. இந்த சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.

ஒரகடம், ஸ்ரீபெருமந்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன.

இந்த சாலையில் திருக்கச்சூர், பெரியார் நகர், தெள்ளிமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இணைப்பு சாலை 2 கி.மீ., பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தடுமாறி வருகின்றனர்.

இரவு நேரங்களில் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கொளத்துார், ஆப்பூர் உள்ளிட்ட பகுதியில் இணைப்பு சாலையில் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளன.

எனவே இந்த சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement