பட்டாசு ஆலை விபத்து: பலி 10 ஆக உயர்வு

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்து மதுரையில் சிகிச்சை பெற்று வந்த அழகுராஜா 27, நேற்று இறந்தார்.

சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மீனாம்பட்டி மகாலிங்கம் 55, விருதுநகர் ஓ.கோவில்பட்டி ராமமூர்த்தி 38, உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சிவகாசியில் சிகிச்சை பெற்று வந்த லிங்கசாமி ஜூலை 2 ல் இறந்தார். மதுரையில் சிகிச்சை பெற்று வந்த சேர்வைக்காரன் பட்டி அழகுராஜா 27, நேற்று இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

Advertisement