திருப்புவனம் நீதிமன்றத்திலும் விசாரணை தொடக்கம்

திருப்புவனம்:போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் வழக்கு சம்பந்தமாக திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலும் விசாரணை தொடங்கியுள்ளது.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தரிசனத்திற்கு வந்த திருமங்கலம் பக்தர் நிகிதா என்பவரின் காரில் தங்க நகை திருடு போன சம்பவத்தில் மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார் கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் 29, அவரிடம் விசாரணை நடத்தும் போது உயிரிழந்தார்.

போலீசார் தாக்கியதால் உயிரிழந்ததையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் 2 ம் தேதி தொடங்கி விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கேடேஷ் பிரசாத்தும் விசாரணையை தொடங்கி உள்ளார்.

நேற்று முதல் மடப்புரம் கோயில் ஊழியர்கள் சக்தீஷ்வரன், பெரியசாமி,கண்ணன், வினோத், பிரபு, கார்த்திக்வேலு, சீனிவாசன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்து வருகிறது.

போலீசார் தாக்கியதை அலைபேசியில் படம் பிடித்த சக்தீஸ்வரன் விசாரணைக்கு முதலில் ஆஜரானார். வரும் நாட்களில் மற்றவர்களிடமும் விசாரணை நடைபெற உள்ளது.

Advertisement