காவல்துறை காவு வாங்கும் துறையாகி விட்டது

திருப்புவனம்:தமிழகத்தில் காவல்துறை காவு வாங்கும் துறையாக மாறிவிட்டது என தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பேசினார்.

அஜித்குமார் கொலைக்கு நியாயம் கேட்டு தே.மு.தி.க., சார்பில் திருப்புவனத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா பேசியது: தமிழகத்தில் காவல்துறை காவு வாங்கும் துறையாக மாறிவிட்டது. ஐந்து பேரை கண்துடைப்பாக கைது செய்துள்ளனர்.

விசாரணை என்ற பெயரில் அப்பாவிகளை சித்ரவதை செய்வது தடுக்கப்பட வேண்டும், தமிழகத்தில் வரதட்சணை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர். சாத்தான்குளம் சம்பவத்திற்கு கொதித்தவர்கள் கூட்டணிக்காக வாயை திறக்காமல் உள்ளனர்.

காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் சாரிமா என்கிறார். சாரி சொன்னால் இறந்தவர் வந்து விடுவாரா, நிகிதா மீது ஏராளமான புகார்கள் உள்ள நிலையில் ஏன் விசாரிக்கப்படவில்லை. இவ்வாறு பேசினார்.

முன்னதாக அஜித்குமார் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Advertisement