தமிழகத்தில் போலீசார் ஆட்சி :பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினரை அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு தலைவர் ஒ.பன்னீர்செல்வம் சந்தித்து இரண்டு லட்ச ரூபாய் நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில் போலீசார் ஆட்சி நடைபெறுகிறது. அஜித்குமார் மருத்துவ அறிக்கை மூலம் போலீசாரின் கொடூரம் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் தி.மு.க.,ஆட்சி தனது வீழ்ச்சியை உறுதியாக எட்டும்.
ஜெயலலிதா காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்து சிறப்பாக ஆட்சி செய்தார். ஆனால் தி.மு.க., ஆட்சியில் அதிகாரிகளின் எண்ணப்படி காவல்துறை நடக்கிறது. குற்றவாளிகளை உடனடியாக விசாரித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.
ஒவ்வொரு கட்சியிலும் தமிழக முதல்வராக தீர்மானம் நிறைவேற்றுவது வழக்கம். யார் முதல்வராக வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது மக்கள் தான், என்றார்.
மேலும்
-
பீஹாரை இந்தியாவின் குற்றத் தலைநகராக மாற்றிவிட்டனர்: சொல்கிறார் ராகுல்
-
கோலிவுட் டூ ஹாலிவுட்: நடிகர் அஜித்தின் ஆசை
-
வெற்று விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் தரும் தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் தாக்கு
-
கூகுள் குட்டப்பாவிற்கு போட்டியாக பெர்ப்ளெக்சிட்டி பெரியப்பா வந்தாச்சுப்பா!
-
வலைதளங்களில் வரும் மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நம்பாதீர்கள்; சித்த மருத்துவர் சிவராமன்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; ஒருவர் பலி; 6 பேர் படுகாயம்; 8 அறைகள் தரைமட்டம்