ஒகேனக்கல்லில் 10வது நாளாக தடை

ஒகேனக்கல்:காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி அணைக்கு வரும் உபரிநீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை 50,000 கன அடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் குளிக்க பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை 10வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

Advertisement