நினைவு ஸ்துாபியில் விவசாயிகள் மலர் அஞ்சலி

பல்லடம் : கடந்த, 1972ல், விவசாய மின் கட்டணத்திற்காக போராடி உயிர் நீத்த விவசாய போராளிகள், 'சுப்பையன், முத்துக்குமாரசாமி ஆகியோரின் நினைவு ஸ்துாபி, பல்லடம் அடுத்த, கே. அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ளது. நேற்று, 53வது ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

l கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மாநில செயல் தலைவர் வெற்றி தலைமையில், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், நகரத் தலைவர் தங்கவேல் உட்பட பலர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

l உழவர் உழைப்பாளர் கட்சியின் சார்பில், மலர் வளையம் வைத்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலத் தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட தலைவர்கள் மகுடேஸ்வரன், தமிழரசன், செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

l தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநிலத் துணைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், மாவட்ட செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

l தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையில், நிர்வாகிகள் சண்முகசுந்தரம், கோபால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், கோஷங்கள் எழுப்பியபடி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

Advertisement